தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில், 3 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retired hurt ஆகி வெளியேறியது பேசுபொருளாகியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் 15ஆம் தேதி அன்று, நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் விளையாடிய கில் 79 ரன்கள் எடுத்து இதே போல் retired hurt ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.