Also Watch
Read this
Posted on: Dec 07, 2025 09:51 AM
By: Web Team

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் அவர், 30 ரன்கள் அடித்திருந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்திய அணியில் சச்சின், கோலி, டிராவிட் ஆகியோர் இதே சாதனையைப் படைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved