news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews 'Dublin Guardians' அணியின் உரிமையாளர் ராகுல் டிராவிட்
tv

Also Watch

tv

Read this

'Dublin Guardians' அணியின் உரிமையாளர் ராகுல் டிராவிட்

'Dublin Guardians

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல் டிராவிட்

ஐரோப்பிய T20 பிரீமியர் லீக் தொடர் :

ஐரோப்பிய T20 பிரீமியர் லீக் தொடரில் 'டப்ளின் கார்டியன்ஸ்' அணியின் உரிமையாளராக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  ராகுல் டிராவிட் அறிவிக்கப்பட்டார். டப்ளின் நகரில் நடைபெற்ற நிகழ்வில், ETPL தனது ஆறு அணிகளுக்கான உரிமையாளர் பட்டியலை அறிவித்தது.

IPL-ல் பவுலர்கள் 4 ஓவர் தான் பந்துவீச வேண்டும் என வரம்பு :

“IPL-ல் பவுலர்கள் 4 ஓவர்கள்தான் பந்துவீச வேண்டும் என்ற வரம்பு நீக்கப்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பேட்டர்கள் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்யலாம் என்றால், சிறப்பாக பந்துவீசும் பவுலர் கூடுதலாக ஒரு ஓவர் பந்துவீசலாம் என்ற சிறப்பு சலுகை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர்

காலிறுதி சுற்றுக்கு கோகோ காப் தகுதி :

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனை கோகோ காப், கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். ரோம் நகரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 5க்கு 7, 7க்கு 5, 6க்கு 2 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை இவா ஜோவிக்கை வீழ்த்தி கால் இறுதியை எட்டினார்.

FIFA கால்பந்து உலக கோப்பை தொடரின் நேரலை :

FIFA கால்பந்து உலக கோப்பை தொடரின் நேரலையானது, இந்தியாவில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FIFA முன்வைத்த தொகைக்கு எந்த தனியார் நிறுவனங்களும் வாங்க முன்வராததால், இந்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனே ஒளிபரப்பு உரிமையை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியில் தோற்றாலும் சாதனை படைத்த ஸ்ரேயஸ் : 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் புது சாதனையை படைத்தார். டெல்லி அணிக்கு எதிராக தொடர்ந்து மூன்று போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்ததன் மூலம் விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஸ்ரேயஸ் அயர் சமன் செய்துள்ளார்.

Related Link
IPL 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் RCB

IPL 2026 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் RCB


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பஞ்சாப்பில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய மர்ம கும்பல்

0
4 mins agoshare
பஞ்சாப் பாஜக








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved