Also Watch
Read this
By: Manigandan Raja

மீண்டும் இரு நாடுகளும் தாக்கிக் கொள்ளும் அச்சம் :
2-ம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ரஷ்யா- உக்ரைன் இடையே அறிவிக்கப்பட்ட 3 நாட்கள் போர் நிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த போர் நிறுத்தத்தை இரு நாடுகளும் மீறியதாக மாறி மாறி புகார் கூறிக் கொண்ட நிலையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் மீண்டும் தாக்குதல் நடக்கும் அச்சம் எழுந்துள்ளது.
ஸ்காட்லாந்து எம்பியாக தமிழ்நாடு திருநங்கை தேர்வு :

ஸ்காட்லாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 29 வயதான மருத்துவர் கியூ மணிவண்ணன் ஒரு திருநங்கையாகவும் , தமிழ் பின்னணியைக் கொண்டவராகவும் இருந்து வருகிறார். இவர் தேர்தலில் வென்றது ஐரோப்பிய அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் :

இலங்கையின் பண்டாரவளையில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதி மழைநீரில் மூழ்கியது. பண்டாரவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் பண்டாரவளை - பதுளை சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பொது வெளியில் சண்டையிட்டுக் கொண்ட காண்டாமிருகங்கள் :
நேபாளத்தின் சௌரஹாமில் சிட்வான் தேசிய பூங்காவின் எல்லையிலுள்ள சாலையின் அருகே 2 காண்டா மிருகங்கள் மூர்க்கமாக சண்டையிட்டு கொண்டன. இதைக் கண்ட உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் திகைத்து நின்ற தோடு, இந்த அரிதான காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
டிராஃபிக் சிக்னல் கம்பத்தின் உச்சியில் தொங்கும் பைக் :

கனடாவில் கார் மீது மோதிய பைக், பறந்து சென்று சிக்னல் கம்பத்தின் உச்சியில் தொங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே - டெல்டா எல்லை பகுதியில் அதிவேகமாக வந்த பைக், பி.எம்.டபிள்யூ. கார் மீது மோதிய வேகத்தில் பறந்து சென்று டிராஃபிக் சிக்னல் கம்பத்தின் உச்சியில் சிக்கிக் கொண்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved