news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் அறிமுகம்

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, எம்.ஆர்.சி.நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அதிமுக எம்எல்ஏக்களைச் சந்தித்தார்.

தமிழக முதல்வராக விஜய்
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரின் அலுவலகத்தில் முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
இந்தச் சந்திப்பின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இரா.காமராஜ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் விஜய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மூன்றாவது இடத்தில் அதிமுக
சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக அக்கட்சி எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி  அணி என்று, இரு பிரிவுகளாக செயல்படுகிறது. பழனிசாமியை சட்டப்பேரவைக் குழு தலைவராக்க 17 எம்எல்ஏக்களும், வேலுமணியை தலைவராக்க 30 எம்எல்ஏக்களும் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
தமிழக சட்டப்பேரவையில் நாளை மே 13ஆம் தேதி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவின் ஒரு தரப்பு அவரை ஆதரித்து உள்ளதால், அவருக்கான பெரும்பான்மை எண்ணிக்கை அதிகரிப்பது உறுதியாகி உள்ளது.

Related Link
திமுக உடன் கூட்டணி என்பது வதந்தி - அதிமுக அறிக்கை

திமுக உடன் கூட்டணி என்பது வதந்தி - அதிமுக அறிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'Dublin Guardians' அணியின் உரிமையாளர் ராகுல் டிராவிட்

0
3 mins agoshare
ராகுல் டிராவிட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved