பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி வெறும் 40புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 270 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.