நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூருவில் தொடங்கிய முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களும், விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் டக் அவுட்டாகி வெளியேறினர். ஜெயஸ்வால் 63 பந்துகளில் 13 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகினர். பந்த் 20 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.