Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 01:16 PM
By: Srini Vasan

இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பதிலடி கொடுத்துள்ளார்.
26 உயிர்களை குடித்த பஹல்காம் தாக்குதல் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷாகித் அப்ரிதி, காஷ்மீரில் வலிமை மிக்க 8 லட்சம் ராணுவ வீரர்கள் பணியில் இருந்தும் இதுபோன்ற தாக்குதல் நிகழ்த்தப்பட்டது, இந்திய ராணுவம் திறமையற்றது மற்றும் பயனற்றது என்பதையே காட்டுவதாக தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தவான், ஏற்கனவே மிகவும் தரம் தாழ்ந்து சென்று விட்டீர்கள், இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து செல்லுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இந்திய ராணுவம் குறித்து பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved