news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பணத்தை இழந்ததாக காய்கறி வியாபாரி வேதனை
tv

Also Watch

tv

Read this

பணத்தை இழந்ததாக காய்கறி வியாபாரி வேதனை

திண்டுக்கல் - நத்தம்

Posted on: Mar 23, 2026 04:00 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gpay scam

காய்கறி வியாபாரி வேதனை  :

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் லோகநாதன்  (வயது 40)இவர் நத்தம் யூனியன் அலுவலகம் அருகே (பூமிகா என்னும் பெயரில்) காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கடைக்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் gpayல் பணம் மாற்றி தருமாறும் அருகில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜிபிஎல் பணம் மாற்றம் செய்வதில்லை என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த மர்ம ஆசாமி மிகவும் அவசரமெனவும் ஏடிஎம் எடுத்து வரவில்லை எனவும் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டதால் கடையின் உரிமையாளர் பணம் தர ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து 10000/-gpay ல் மாற்றி விட்டதாகவும் தங்களது யுபிஐ பேமென்ட் பாக்ஸில் சத்தம் வரவில்லை எனக் கூறியுள்ளார்.

இதை நம்பிய கடைக்காரரும் பணத்தை அந்த மர்ம நபரிடம் வழங்கியுள்ளார். பிறகு தனது வங்கிக் கணக்கில் சென்று பார்த்த போது பணம் வரவில்லை என தெரிந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

அதற்குள் அந்த மர்மஆசாமி ஓடி விட்டான். தான் ஏமாற்றபட்டோம் என்பதை உணர்ந்த கடைக்காரர் புலம்பி வருகிறார். ஆகவே இந்த நூதன திருடனை தன்னிடமோ அல்லது காவல் துறையிடமோ பிடித்து கொடுக்கும் நபருக்கு அந்த கடைக்காரர் தக்க சன்மானம் தருவதாகவும் தெருவிக்கிறார்.

மேலும் இதேபோல் GPAY,PHONEPAY,PAYTM உள்ளிட்ட செயல்களில் பணம் அனுப்புவதாக கூறி நூதன முறையில் நத்தம் பகுதியில் பல்வேறு கடைகளில் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருகிறது.இதற்கு என்ன செய்வது என தெரியாமல் வணிகர்களும் கடை உரிமையாளர்களும் திணறி வருகின்றனர். இவனிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களை எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

Related Link
நியூஸ் தமிழ் கள ஆய்வில் லாட்டரி விற்பனை அம்பலம்

நியூஸ் தமிழ் கள ஆய்வில் லாட்டரி விற்பனை அம்பலம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடைசி நொடியில் சீனையே மாற்றிய முக்கிய கட்சி..

0
15 mins agoshare
CPMbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved