Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 12:22 PM
By: Web Team

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக, தென்னாப்பிரிக்கா வீரர் ஃபாப் டு பிளெசிஸ் அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு பதிலாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர், வருவிருக்கும் 2026 ஐபிஎஸ் சீசனுக்கான மினி ஏலத்தில் பங்குபெற போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக இவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved