கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி, 35 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2019-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலேயே தோனியால் இந்திய அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதால், அப்போதே அதை புரிந்து கொண்டு அவர் ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.