வங்கதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 213 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது.