8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக தொகுதிகளை கேட்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக உடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.