Also Watch
Read this
By: Web Team

அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாகை அவுரி திடலில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, தமிழகத்தை கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக திமுக அரசு மாற்றியதாகவும், பிறக்கும் குழந்தைக்கு கூட தலைக்கு ஒன்றரை லட்சம் வீதம் கடன் இருப்பதாகவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved