ஆளுநர் ரவி அரசியல்வாதி போல செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், ராஜ் பவன் அரசியல் பவனாக மாறி கமலாலயம் போல் செயல்படுவதாகவும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இருக்கும் உறவை எந்தெந்த வகையில் துண்டிக்கலாமோ, அப்படி துண்டிக்கின்ற வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.