Also Watch
Read this
By: Web Team

உயர்நீதிமன்றத்தீர்ப்பையும் மீறி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு பணியாளர்களை அரசு நியமிக்க முயற்சிப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த பணிக்கு இளங்கலை பட்டப் படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையை திமுக அரசு திரும்ப பெற முடிவு எடுத்திருப்பதாகவும், இதனால், மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே இவர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved