Also Watch
Read this
By: Web Team

ஆண்டு இறுதியை முன்னிட்டு, கார்களுக்கு டாடா நிறுவனம் அசத்தல் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஹேரியர், சஃபாரி கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இதேபோல், பஞ்ச் காருக்கு 75 ஆயிரமும், நெக்சான் காருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகை வழங்குகிறது. இந்திய சந்தையில், ஹேரியர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.14 லட்சம் முதல் ரூ.25.24 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சஃபாரி மாடலின் விலை ரூ.14.66 லட்சம் முதல் ரூ.25.96 லட்சம் வரை ஆகும். இதுபோல் டாடா அல்ட்ராஸ் மாடலுக்கு ரூ.85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.5 லட்சம் முதல் துவங்குகிறது. டாடா பஞ்ச் காருக்கு ரூ.75 ஆயிரம் வரையிலும் (ஷோரூம் விலை ரூ.5.5 லட்சம் முதல்), டியாகோ, டிகோர் கார்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையிலும் (டியாகோ ரூ.4.57 லட்சம் முதல், டிகோர் ரூ.5.49 லட்சம் முதல்), நெக்சான் (ரூ.7.99 லட்சம் முதல்) மற்றும் கர்வுக்கு (ரூ.9.65 லட்சம் முதல்) ரூ.50 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி சலுகை பெறலாம். இந்த தள்ளுபடி நகரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved