உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மூன்று முறை எக்ஸ் தளம் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி பிற்பகல் 3.30, இரவு 7 மணி மற்றும் 8.45 மணிக்கு எக்ஸ் தளம் முடங்கியது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எக்ஸ் தளம் முடங்கியதாக பயனர்கள் புகாரளித்தனர்.