news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மகளிர் திட்டங்கள் - தவெக தலைவர் விஜய் அறிவிக்கிறார்
tv

Also Watch

tv

Read this

மகளிர் திட்டங்கள் - தவெக தலைவர் விஜய் அறிவிக்கிறார்

மாமல்லபுரத்தில் தயார்

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று மார்ச் 7ஆம் தேதி, கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக மகளிருக்கான திட்டங்களையும் அறிவிக்கிறார்.

மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில்...
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கூட்டணிகளோடு, சீமானின் நாம் தமிழர், விஜய்-ன் தவெக இடையே தான் இந்த தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது. தவெக தரப்பில், கூட்டணியை அமைக்க முயன்றது, ஆனால், நடக்கவில்லை. கூட்டணி அமையா விட்டாலும் கூட தனித்து களமிறங்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.
இந்நிலையில், தவெக சார்பில் தேர்தல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி அனைத்து வயது பெண்களின் ஓட்டுக்களை கவரும் வகையில் களப்பணி ஆற்றி வருகிறது. மாமல்லபுரத்தில் தவெக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, இன்று கொண்டாடப்படுகிறது. பெண்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை, விஜய் அறிவிக்க உள்ளார்.

மகளிருக்கு முக்கியத்துவம்
ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழகத்தில் தொகுதி வாரியாக பெண்களின் ஓட்டுக்களை அதிகம் பெற, ஒவ்வொரு கட்சிகளுக்கு இடையேயும் கடும் போட்டி உள்ளது. இதனால் தான், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்படுகிறது. பெண்களை கவரும் வகையில், மகளிர் உரிமைத் தொகையை ரூ.1000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக தருவதாக திமுக, அதிமுக அறிவித்துள்ளன. இந்த வரிசையில், தவெகவும் மகளிர் ஓட்டுக்களை வசப்படுத்தும் வகையில், கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது. இதனால், தவெகவின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக அறிவிப்பு
இதுதொடர்பாக தவெக தலைமை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தவெக சார்பில், தலைவர் விஜய் பங்கேற்கும் மகளிர் தின விழா, 07.03.2026 சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தவெக மகளிருக்கான திட்டங்கள் குறித்து தலைவர் அறிவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு அனுமதி இல்லை
இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர, வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அனுமதிச் சீட்டு இல்லாதவர்களும், பொது மக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, இந்த நிகழ்ச்சியை டிவி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், வரும் 8ஆம் தேதி அன்று, அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
வைரல் ஆன விஜய், திரிஷா

வைரல் ஆன விஜய், திரிஷா

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
44 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved