தமிழக மாணவர்கள் இருமொழிக்கொள்கையை தான் விரும்புவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள உயர் கல்வி மன்றத்தில் நடைபெற்ற எந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் சாடினார்.