news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழகம் முழுவதும் பரவலாக மழை, பொது மக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

தமிழகம் முழுவதும் பரவலாக மழை, பொது மக்கள் மகிழ்ச்சி

மழையால் விவசாயிகள் கவலை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் மழை பெய்து வருவதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை சுற்று வட்டார பகுதியில், கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான பொன்னேரி, வக்கணம் பட்டி, கோடியூரில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குளிர்ச்சியான காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி: கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மாலை நேரம் பரவலாக மழை பெய்தது. புளியங்குடி, டி.என்.புதுக்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி: கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் திடீரென மேகமாக, இருள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை பெய்துள்ளது.


தென்காசி: சிவகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென மாலை நேரத்தில், பரவலாக மழை பெய்தது. சிவகிரி, விஸ்வநாதபேரி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்தது.


திருவாரூர்; பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. நன்னிலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர், முடிகொண்டான், திருக்கண்ணமங்கை, அரசவனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்தது.
மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள போதும், குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 5 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved