கோவையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவியை கண்டுபிடிக்க தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள இபிஎஸ், குற்றச்செயல் நிகழ்ந்ததாக கூறப்படும் 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை என்றும் வினவி உள்ளார். இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை:கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு, போலீசாருக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அந்த மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது போலீஸ்? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. 100 போலீசார் இணைந்து, பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக கமிஷனர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, 'சிறிய சுவர் ஒன்று இருந்தது. அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற போலீஸ் கமிஷனர், சில நிமிடங்களில், 'மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் ' என தனது கருத்தை மாற்றினார்.அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை? 'இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற விளக்கத்தை அளிக்கவே கூச்சப்பட வேண்டும்.இந்த சூழலில், 'ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்' என்று பெருமை பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு முன்னால், போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், In case you've forgotten, போலீசார் உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்). இவ்வாறு இபிஎஸ் தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள் - மாணவியை கண்டுபிடிக்க தாமதமானது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி | Coimbatore Harassment