கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில பகுதிகள்ல மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிச்சிருக்குது. இந்நிலையில, வானிலை முன்னெச்சரிக்கைகள் என்னென்ன அப்டீங்கிறத விரிவா பாத்துடலாம். டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகள்ல தமிழகத்தில ஓரிரு இடங்கள்லையும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலேயும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவிச்சிருக்குது. டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலேயும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்குது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரைக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்னு சொல்லப்பட்டிருக்குது. நகரின் ஒருசில பகுதிகள்ல லேசான மழை பெய்யக்கூடும்னு, அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்ன்னு சொல்லப்பட்டிருக்குது. மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரைக்கும் 8ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளிலும், 11ஆம் தேதி வங்கக் கடல் பகுதிகளிலேயும், 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அரபிக் கடல் பகுதிகளிலேயும் எச்சரிக்கை ஏதும் இல்லைன்னு தெரிவிக்கப்பட்டிருக்கு. தவிர, 9ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகளிலும், 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வங்கக் கடல் பகுதிகளிலும், 11ஆம் தேதி அரபிக் கடல் பகுதிகளிலேயும் சூறாவளிக்காற்று வீசும் என்பதால அங்கு இந்த தேதிகளிலெல்லாம் போகவேண்டாம்னு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கு.