கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் ஒரே நாளில் 356 திருமணங்கள் நடைபெற்றுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்குள் 356 ஜோடிகளுக்கு திருமணங்களை செய்து வைத்து சாதனை படைத்துள்ளது குருவாயூர் தேவசம் போர்டு.