news-tamil-logo

3/22/2026, 2:50:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "நாங்க BAD BOYS .." பேருந்து ஓட்டியபடியே VIBE.. பறிபோன வேலை..
tv

Also Watch

tv

Read this

"நாங்க BAD BOYS .." பேருந்து ஓட்டியபடியே VIBE.. பறிபோன வேலை..

பேருந்து ஓட்டியபடியே VIBE

Posted on: Feb 05, 2025 08:19 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

சென்னையில் அரசுப் பேருந்தில் வைப் செய்து ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் வீடியோ தற்போது வைரலாகிய நிலையில், இருவரின் வேலையையும் தட்டித் தூக்கி நடவடிக்கை பாய்ந்துள்ளது. விதிமுறைகளை மீறி பயணிகளுடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்த சம்பவம்.

'பேட் பாய்' பாடலுக்கு வைப் செய்து ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் வீடியோ காட்சிகள் தான் இவை...

சமீப காலமாக அதிகரித்துள்ள ரீல்ஸ் மோகம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் வயதான ஆயாக்கள் வரை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வருகின்றனர். மேலும் டெய்லர் அக்கா, ஜிம் அக்கா, யோகா அக்கா என பெயர் வைத்து ஃபேன்ஸ் பேஸை ( fans Base ) கிரியேட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் சென்னையில் அரசு மாநகரப் பேருந்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் பயணிகளுடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்து 'பஸ் அண்ணா'-வாக முயன்றுள்ளனர் அந்த பேட் பாய்ஸ்..

பல உயிர்களை பாதுகாப்பாக பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓட்டுனரும், நடத்துனருமே இப்படி பொறுப்பில்லாமல் செயல்பட்டிருப்பது வருத்தத்திற்கு உரியதாக பலரும் குற்றம் சாட்டினர்.

விதிகளை மீறி செயல்பட்ட இந்த பேட் பாய்ஸ் - இன்( Bad Boys ) ரீல்ஸ் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வடபழனி போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் நடத்துனர் சீரியலில் நடித்து வருவதால், தனது கைவசம் உள்ள திறமைகளை பணிகளின் உயிரை பணயம் வைத்து வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தான் விதிமுறைகளை மீறி பயணிகளுடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்த இருவரையும் பணிநீக்கம் செய்ய மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மற்ற மாநகராட்சி போக்குவரத்து ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டுமே அரசு பேருந்துகளின் வாயிலாக 1300க்கும் மேற்பட்ட விபத்துக்களில் 78 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், வாகனத்தை இயக்கும் போது மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவது, ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

ரீல்ஸ் போட்டத்துலாம் ஒரு பெரிய குத்தமா?.. என கமெண்ட் செக்க்ஷனில் (section ) கருத்து தெரிவிக்கும் கும்பலும், ரீல்ஸ் தானே என அலட்சியப்படுத்தும் கும்பலும், "விபத்து அதுவாக ஏற்படுவதில்லை.. நமது அலட்சியத்தால் தான் ஏற்படுகிறது" என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved