Also Watch
Read this
By: Manigandan Raja

கர்நாடக மாநிலத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.


பட்ஜெட் தாக்கல்
கர்நாடக மாநிலத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு, அந்த மாநில அரசு தடை விதிப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கர்நாடக அரசின், 2026 - 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அந்த மாநில சட்டப்பேரவையில், முதல்வர் சித்தராமையா மார்ச் 6ஆம் தேதி தாக்கல் செய்து உரை ஆற்றினார். அப்போது, கர்நாடகத்தில் சிறார்களின் நலனுக்காக, சில முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

16 வயதுக்குட்பட்ட சிறார்கள்
கர்நாடக மாநிலத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதையடுத்து, இந்தியாவில் முதல் மாநிலமாக, கர்நாடகத்தில் இந்த தடை விதிக்கப்படுவது நாடு முழுவதும் பெருமளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விரைவில் நெறிமுறைகள் அமலாகும்
இதற்கான அமலாக்க நடைமுறை, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறார்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதையும், அச்சுறுத்தும் பதிவுகளால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved