இந்தியாவில் 5 முக்கிய மெட்ரோ TO மெட்ரோ வழித்தடங்களில் விஸ்தாராவின் A320 விமானங்களை இயக்க உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் கூட்டு நிறுவனமாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இதனை ஏர் இந்தியா குழுமத்துடன் இணைக்கும் பணிகளை ஏர் இந்தியா முன்னெடுக்கப்பட்ட நிலையில் விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்தியா விமானங்களாகப் பறக்க உள்ளன. அதன்படி டெல்லி-மும்பை மற்றும் மும்பை-ஹைதராபாத் உட்பட ஐந்து முக்கிய மெட்ரோ-TO-மெட்ரோ வழித்தடங்களில், குறுகிய உடல் அமைப்பை கொண்ட விஸ்தாராவின் A320 விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாரத்திற்கு 35 ஆயிரம் பேர் இவ்வழித்தடங்களில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.