கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கல்வி நிலையங்களுக்கு இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.