Also Watch
Read this
By: Manigandan Raja
பான் இந்தியா ஸ்டார் ஜோடிகளான விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று உதய்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. அவரவர் முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தின் அடையாளமாக, 2 பேரும் தங்களோட காதலை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வெளிப்படுத்தினார்கள்.


சங்கீத்... வீடியோ, போட்டோக்கள் வைரல்
தற்போது, கல்யாணத்துக்கு முன்னாடி பிப்.24ஆம் தேதி நடைபெற்ற தங்களோட ’சங்கீத்’ நிகழ்ச்சியோட வீடியோவையும், புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இந்த நிகழ்ச்சியில், “கண்ணீர் வரும் வரைக்கும் சிரிச்சதாகவும், கால் வலிக்கும் வரைக்கும் நடனமாடியதாகவும், மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.


VIROSH ஜோடிக்கு...
மேலும், அழகான மக்களோடு நடைபெற்ற இந்த மிகப்பெரிய நிகழ்ச்சி மிகவும் சந்தோஷத்தை தந்ததாகவும் பதிவிட்டுள்ளார் விஜய். இப்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில, VIROSH ஜோடிக்கு FANS எல்லாரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved