தமிழ்நாட்டின் மொழியோடும், கல்வியோடும், உரிமையோடும் விளையாடுவது நீறுபூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம் என மத்திய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், டெல்லியில் இருந்து ஆள்வதால் நம்மை விட மேலே இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.