ஜப்பானில் குளிர்காலம் தொடங்கி கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், எங்கு பார்த்தாலும் வெண் போர்வை போர்த்திய பூமியாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், ஹிரகாவாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ரயில் தண்டவாளம் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில் இன்ஜின் மூலம் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன.