ஒடுக்குமுறைக்கு அஞ்சி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த உய்குர் இனத்தவர் 40 பேர் மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீனா அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக தாய்லாந்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். உய்குர் இன இஸ்லாமியர்களை சீனா கொடுமைப்படுத்துவதாக எழுந்த புகார் காரணமாக பலர் தாய்லாந்துக்கு அடைக்கலம் தேடி செல்கின்றனர்.