Also Watch
Read this
Posted on: May 05, 2025 08:03 AM
By: Srini Vasan

டூரிஸ்ட் பேமிலி அற்புதமான திரைப்படம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் பாராட்டியுள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டூரிஸ்ட் பேமிலி என்ற படம் தமது மனதை மிகவும் ஈர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோடு மனிதாபிமான உறவோடும், பேரன்போடும் வாழும் வாழ்க்கையை "டூரிஸ்ட் பேமிலி படம் போதிக்கிறது எனவும், படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய்கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குனர் அபிசன் ஜீவிந்த்தை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மகிழ்ச்சியையும் பாராட்டையும் பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved