news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்
tv

Also Watch

tv

Read this

கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

ராகுல்காந்தி பங்கேற்பு

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கர்நாடக முதலமைச்சராக, டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். இந்நிகழ்வில், கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

சித்தராமையா விலகல்
கர்நாடக மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பதவி விலகியதை அடுத்து, புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று ஜூன் 3ஆம் தேதி மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், கர்நாடக முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்பு பிரதியை கைகளில் ஏந்தியவாறு அவர் உறுதிமொழி ஏற்று, பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தவார்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

வந்தே மாதரம் பாடலுடன்...
பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய கீதமும், அதனைத் தொடர்ந்து கர்நாடக வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், வந்தே மாதரம் பாடலும், தேசிய கீதமும் பாடப்பட்டன.

ராகுல்காந்தி பங்கேற்பு
பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அமைச்சர்கள் பதவி ஏற்பு
முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றதை தொடர்ந்து துணை முதல்வராக ஜி.பரமேஸ்வரா, அம்பேத்கரின் பெயரால் உறுதிமொழி அளித்து பதவியேற்றார். பின்னர், கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சத்தீஷ் ஜரகிஹோலி, கிருஷ்ணா பைரேகவுடா, பிரியங்க் கார்கே, யு.டி.காதர், ஈஸ்வர் கந்தரே, யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

Related Link
ஆர்.எஸ்.எஸ் to காங். முதலமைச்சர் அரியாசனத்தில் ஏறும் டி.கே.எஸ்.

ஆர்.எஸ்.எஸ் to காங். முதலமைச்சர் அரியாசனத்தில் ஏறும் டி.கே.எஸ்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

6
6 hrs 36 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved