Also Watch
Read this
By: Admin News Tamil
முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை செலுத்தி உள்ளார்.

தமிழக அரசு மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.

முதல்வர் விஜய் மரியாதை
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன். அவருடைய பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து, புகழாரம் சூட்டி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved