கேரளாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியபோது, திடீரென பள்ளிக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்குள் ஒரு குட்டி யானையுடன் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன. இதனால் மாணவர்கள் அச்சத்துடனே தேர்வெழுதிக் கொண்டிருந்த நிலையில், காட்டு யானைகளை தடுக்கும் விதமாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.