சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள் என்ற பவன் கல்யாணின் விமர்சனத்திற்கு, WAIT AND SEE என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, ஆந்திர துணை முதலமைச்சரான பவன் கல்யாண் சாபம் விடுத்து விமர்சித்திருந்தார். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், யார் அழிந்து போவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்ற வகையில், WAIT AND SEE என சிரித்தபடியே பதிலளித்தார்.