விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்கக் கூடாது என முடிவெடுக்க அக்கட்சியினருக்கு உரிமை உள்ளது எனவும், இதனால் கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படாது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.