கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கும், சங்கங்களுக்கும் நிகழாண்டு வரவு செலவாக 1 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். சென்னை குயப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள குலாலர் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தை திறந்து வைத்து, தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை வழங்கி பேசிய அமைச்சர், அனைத்து துறைகளும் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக கூறினார். நெருக்கடி காலங்களில் அரசு அறிவிப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது கூட்டுறவுத்துறைதான் என்றும், வங்கி சேவைகளிலும் கூட்டுறவுத்துறை மிகப்பெரிய சேவைகளை செய்து வருவதாகவும் கூறினார்.