தேக்கடியில் 17வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. மண்ணாரத்தரை கார்டனில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்காட்சியை தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்துகின்றன. மார்ச் 27 முதல் மே 12 ஆம் தேதிவரை 47 நாட்களுக்கு நடைபெறுகிறது.