Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 09:41 AM
By: Manigandan Raja

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு :
மலையாள திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஆடு திரைப்படத்தின் 3-ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சுல்தான் பாடல் வெளியாகியுள்ளது. வேதிகாவின் நடனத்தில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கல்ட் காமெடி திரைப்படமாக தனி இடத்தை பிடித்த ஆடு திரைப்படத்தின் முதல் பாகம் 2015-ல் வெளியானது.
மலையாள நடிகர் ஜெயசூரியாவின் வித்தியாசமான காமெடி நடிப்பு, உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி காரணமாக அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, 2017-ல் வெளியான 2-ம் பாகமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியுள்ள ஆடு -3 திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved