மலேசியாவில் பெட்ரோல் பங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ வானுயர கொழுந்து விட்டு எரியும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. Putra Heights பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில், எரிவாயுக் குழாய் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருவதாக கூறப்படும் நிலையில், உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.