Also Watch
Read this
தேசிய ஜனநாயக கூட்டணி பிரபலம் அடைவதைக் கண்டு திமுக அதிர்ச்சி அடைந்து உள்ளது என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி
இதுதொடர்பாக பிரதமர் மோடியின் பதிவில் கூறி இருப்பதாவது;
திருச்சிராப்பள்ளியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை (மார்ச் 11ஆம் தேதி) நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளேன். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிபிசிஎல் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களும் இதில் அடங்கும். 89 கிராம சாலைத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும்.

எதிர் நோக்கி உள்ளேன் - பிரதமர் மோடி
எர்ணாகுளம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நாளை, மார்ச் 11 அன்று, நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கேரளம் மற்றும் தமிழ்நாட்டிற்கு செல்வதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். கேரளம் சென்றதும், அகில கேரள தீவர சபையின் Akhila Kerala Dheevara Sabha பொன்விழா கொண்டாட்டங்கள் முதல் நிகழ்ச்சியாக உள்ளது. மீனவர் நலனுக்காக இந்த அமைப்பு செய்து வரும் பணிகள் குறிப்பிடத்தக்கவை. அதன் பின், அடுத்தடுத்த நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் அல்லது நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் . இந்தப் பணிகள் எரிசக்தி, நெடுஞ்சாலைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவை.

திமுக அதிர்ச்சி - மோடி பதிவு
மாலை 6:30 மணியளவில், திருச்சியில் நடக்கும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் கூட்டணி தலைவர்களோடு நானும் இணைகிறேன். தேஜ கூட்டணிக்கு மாநிலம் முழுவதும் பிரபலம் அடைந்து வருவதை கண்டு திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

திமுகவின் தவறான நிர்வாகத்தையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்து உள்ளனர். அதனால் தான் தேஜ கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்ற திட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved