கந்த சஷ்டி விழாவின், முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி, தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் உட்பட முக்கிய திருத்தலங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கையில் வேலுடன், சூரபத்மனை, முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘அரோகரா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹார லீலை வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் முதல் படை வீட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி, சுவாமி தரிசனம் செய்தனர்.திண்டுக்கல்; 3ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், வடக்கு கிரி வீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் சூரனையும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும், சக்திவேல் கொண்டு, முருகப்பெருமான் வதம் செய்தார்.தஞ்சாவூர்; 4ஆம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, ஆட்டுக் கிடா வாகனத்தில் வந்த முருகப்பெருமான், கீழ வீதி மற்றும் தெற்கு வீதியில் கஜமுகா சூரன், சிங்கமுக சூரன் மற்றும் சூரபத்மனை வதம் செய்தார்.திருவள்ளூர்; சூரபத்மனை வதம் செய்து, சினம் தணிந்த இடமான 5ஆம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பல்வேறு வண்ண மலர்களால் முருகனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.மதுரை; 6ஆம் படை வீடான பழமுதிர்சோலையில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகன், சூரனை வதம் செய்தார். திரளான பக்தர்கள் "அரோகரா மற்றும் வெற்றிவேல் வீரவேல்" கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடைபெற்றது. கையில் வேலுடன் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவள்ளூர்; சிறுவாபுரி சுப்பிரமணி சுவாமி கோயிலில் வீரபாகு துணையுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். ராணிப்பேட்டை; ரத்தினகிரி பகுதியில் ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் 6 தலை கொண்ட சூரபத்ம அசுரனை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியை நாடக கலைஞர்கள் தத்ரூமான முறையில் நடித்து காட்டினர்.தூத்துக்குடி; கோவில்பட்டி அருகே தென் பழனி என்று அழைக்கப்படும், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் கரகோஷங்களுக்கு இடையே வீரவேல் ஏந்தி, முருகன் அசுரர்களை வதம் செய்தார்.புதுக்கோட்டை; விராலிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். விழுப்புரம்; மயிலம் முருகன் கோயிலில் சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர்.இதையும் பாருங்கள்... முருகனின் அறுபடை வீடுகள் - தனிப் பெருமைகள் என்னென்ன? | Tiruchendur Soorasamharam 2025