ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெறுவதே தமது முன்னுரிமை எனவும், அது நடக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள தேசிய மாநாடு கட்சியின் முதலமைச்சர் முகமாக ஒமர் அப்துல்லா பார்க்கப்படுகிறார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ஜம்மு காஷ்மீருக்கு மாநில பிரிவினைக்கு முன்பு இருந்ததை போல முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்காது என கூறினார். எனினும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து பெற உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். 370 ஆவது பிரிவை திரும்ப பெறுவது நீண்ட போராட்டமாக இருக்கும் என்ற அவர், ஆனால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து மாநில அந்தஸ்தை பெறலாம் என்றார்.