Also Watch
Read this
Posted on: Mar 14, 2025 06:33 AM
By: Srini Vasan

கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க தடையில்லை என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கனிம வளங்கள் மீதான வரி விதிப்பிற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், 8 நீதிபதிகள் வரி விதிக்கலாம் எனவும், ஒரு நீதிபதி முரண்பட்ட கருத்தையும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசும், கர்நாடக மாநில இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved