ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி என்பது, நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மகத்தான வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். திமுகவிற்கு ஆதரவாக களப்பணியாற்றிய காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார். திமுக அரசின் மகத்தான திட்டங்களுக்கு மனமுவந்து மக்கள் வெற்றியினை தந்துள்ளதாக கூறியுள்ளார்.