Also Watch
Read this
Posted on: Oct 28, 2025 11:18 AM
By: Web Team

இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்பது, ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள ஆபத்தான சவால் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை துவங்கி விட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பினராயி விஜயன், தேர்தல் ஆணையத்தின் திட்டம் பல ஐயங்களை ஏற்படுத்துவதாகவும், இதனால் தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பயன்படுத்தாமல் 2002 முதல் 2004 வரையிலான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த SIR, 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் 1960 வாக்காளர் பதிவுச் சட்டம் ஆகியவற்றுக்கு முரணானது எனவும், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved