ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK23 படத்தின் டைட்டில் டீசர் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் மலையாள நடிகர் பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.