"அமரன்" படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி ஹீரோயினாகவும் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.தமிழகத்தை சேர்ந்த வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.